ஆத்தூர் வசிஷ்ட நதியில் எழும்புக் கூடான நிலையில் பெண் சடலம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பமசமுத்திரம் பகுதியில் வசிஷ்ட நதியில் அடையாளம் தெரியாத எழும்புக் கூடான நிலையில் பெண் சடலம் கிடப்பதைக் கண்டு அவ்வழியாக சென்ற ஆடுமாடு மேய்ப்பவர்கள் இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊரக போலீசார் எழும்புக் கூடாக கிடக்கும் உடலை மீட்டு உடற்கூறாய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது கொலையா? தற்கொலையா? அல்லது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது தண்ணீரில் அடித்துச் சென்றதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி