ஆத்தூர்: கணவன் கண் முன்னே மனைவி பலி

ஆத்தூர் அருகே உறவினர் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற லோகநாதன், மணிகண்டன், கலைவாணி மூவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மேம்பாலத்திலிருந்து கலைவாணி (28) மற்றும் அவரது கணவர் லோகநாதன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். கலைவாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லோகநாதனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணிகண்டன் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி