ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி பகுதியில் தமிழக அரசின் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான புத்தகங்கள், கணினி வசதியுடன் கூடிய பயிலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 140 வாசகர்கள் குறையாமல் வந்து செல்கின்றனர். போட்டித் தேர்வர்கள் திறம்பட தேர்வை எதிர்கொள்ள அறிவு சார் மையம் உதவுகிறது என்று நூலக மேலாளர் தெரிவித்தார்.