சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோவிந்தராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா மற்றும் சங்கவி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் வைஷ்ணவி ஆகிய இரண்டு காதல் ஜோடிகள், தங்கள் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.