ஆத்தூர்: ஆசிரியையிடம் செயின் பறித்த 2 பேர் கைது

ஆத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி ஆசிரியை திவ்யா(28) என்பவரிடமிருந்து 2 பவுன் செயினை பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர். ஜனவரி 28 இரவில் நடந்த இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் பெரம்பலுார், ஏரிக்கரையைச் சேர்ந்த கண்ணன் மகன் சூர்யா (19) மற்றும் 16 வயது மாணவர் ஆகியோர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஆத்தூர் நகர போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி