வாழப்பாடி அருகே சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியும் பரிசோதனை செய்வதாக எழுந்த புகாரில், மருத்துவக் குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டில் மூன்று கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்த வெங்கடேசன் மற்றும் லதா ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர். இவர்கள் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறியும் இயந்திரத்தை பயன்படுத்தி பரிசோதனை செய்தது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.