ஆத்தூர்: பஸ் படியில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்த சோகம்

ஓமலூர் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (60), ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பேருந்தில் வந்துள்ளார். செல்லியம்பாளையம் பகுதியில் இறங்குவதற்காக படியில் நின்றபோது, சாலை வளைவில் பேருந்து திரும்பியதில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி தன்ராஜ் உயிரிழந்தார். ஆத்தூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி