சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள், குறிப்பாக பலம் மற்றும் பூக்கடைகள், நடைபாதை சாலையை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், ஆத்தூர் நகராட்சி பணியாளர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.