ஆத்தூர் கஞ்சா விற்பனை மூன்று பேர் கைது 7 கிலோ பறிமுதல்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காந்திபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆத்தூர் ஊரக போலீசார், ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களிடம் இருந்த இரண்டு பைகளில் சுமார் 7 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய வர்மா, சுரேஷ் மற்றும் வைத்தியகண்ட புதூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் இருந்து கஞ்சாவை எடுத்து வந்து ஆத்தூர் பகுதியில் விற்பனை செய்ய முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இரண்டு பட்டதாரி இளைஞர்கள் உட்பட மூன்று பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி