சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் விவசாயி ராமசாமி தனது புதிய வீட்டிற்கு நடத்திய புதுமனை புகுவிழாவில், தனியார் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த உணவைச் சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஆத்தூர் மற்றும் தலைவாசல் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.