சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையத்தில் நேற்று (மே 24) பெய்த கனமழையால், பழமையான புளியமரம் கிளை முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்த சரசு என்ற மூதாட்டி மற்றும் அவரது பேரன், பேத்தி ஆகியோர் காயமின்றி உயிர் தப்பினர். எனினும், இந்த விபத்தில் வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.