சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வைத்திய கவுண்டன் புதூரில் வேளாண் துறை சார்பில் சிறுதானியங்கள் திருவிழா மற்றும் வேளாண் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அமைச்சர் பேசுகையில், இந்தியாவில் தமிழகம் பொருளாதாரம் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் முதன்மை மாநிலமாக விளங்குவதாகக் கூறினார். தொடர்ந்து, 149 பயனாளிகளுக்கு 3 கோடியே 27 லட்சம் மதிப்பிலான விவசாய விலை பொருட்கள் வழங்கப்பட்டன.