சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மனநலம், ஸ்கேன் பரிசோதனை, கண் சிகிச்சை, பல் மருத்துவம் உள்ளிட்ட 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனைகளை செய்து வருகின்றனர்.