ஆத்தூர் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த சாரை பாம்புகள்..வைரல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியில் பசுமை நிறைந்த விளை நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரது தோட்டத்தில் இன்று காலை சாரை பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனம் ஆடின. பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 

இது குறித்து அருகில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிய வரவே கிராம மக்கள் ஓடி வந்து இந்த அதிசய நிகழ்வைக் கண்டு களித்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூன்று பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து பொதுமக்களின் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வினோதத்தையும் ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி