அதிகாலையில் திடீரென மாட்டுக் கொட்டகையில் இருந்து கரும்புகை வெளியேறிவதை அறிந்த மதுரைவீரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது திடீரென தீ பற்றி மளமளவென எரிய தொடங்கியுள்ளது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து ஆடுகளை கொட்டகையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் மதுரைவீரன் ஈடுபட்டிருந்த நிலையில் அதில் சிக்கிக்கொண்டார்.
நிகழ்விடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் லேசான காயம் அடைந்த மதுரைவீரனை அங்கிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.