சேலம்: தடுத்த மருமகள்.. துப்பாக்கியால் சுட்ட மாமனார்

சேலம் மாவட்டம் வாழப்பாடி மந்தகாடு பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயி ஆன இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று (ஜூன் 2) மாலை குடிபோதையில் இருந்த அவர் தகராறில் மனைவியைத் தாக்கியுள்ளார். 

இதை அவரது மருமகள் அனிதா தடுத்ததில் குப்புசாமி கீழே விழுந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குப்புசாமி அனிதாவையும், அவரது கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையையும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். அவரைப் போலீசார் தேடிவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி