ஆத்தூர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் ஆத்தூர்புதுப்பேட்டை உழவர் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளர் நாகராஜன், வேளாண் அலுவலர் திட்டியதால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து, வேளாண் அலுவலரை கைது செய்யக்கோரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஆத்தூர் நகர போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி