வாழப்பாடி: மயானபாதை மூடல்.. பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பேளூர் நடுப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு ஆறுமுகம் மற்றும் சின்னதம்பி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். அண்ணன் தம்பி இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணன் ஆறுமுகம் உடல் நலக்குறைவால் நேற்று (மார்ச் 25) காலமானார். தொடர்ந்து உடலை அடக்கம் செய்வதற்காக சின்னதம்பி நிலத்தின் வழியாக இடுகாட்டிற்கு கொண்டு செல்ல ஆறுமுகத்தின் உடலை எடுத்துச் சென்றனர். 

அவரது தம்பி சின்னதம்பி இடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வழிபாதையை மறைத்ததாக கூறப்படுகிறது. இதனால் துக்கநிகழ்விற்கு வந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் அப்பகுதி பொதுமக்கள் வழிபாதையை மறைத்த சின்னதம்பியை கண்டித்து சேலம் - பேளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாழப்பாடி போலீசார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி