அப்போது வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு 10.5 சதவீதம் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு வழங்கி, 1000 நாட்களுக்கும் மேலாகியும், தமிழக அரசு அதற்கான உத்தரவு பிறப்பிக்காமல் உள்ளது. திமுக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுத்து வருகிறது.
வன்னியர்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பாமக சார்பில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கோஷம் எழுப்பினர். இதில் சேலம் கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.