ஆத்தூர் விவசாயகடன் தள்ளுபடி தமிழகஅரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நீர்முள்ளிக்குட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபட்டினம் பகுதியில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள், கூட்டுறவு சங்க பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நீர்முள்ளி குட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, 5 ஏக்கருக்கும் குறைவான சிறுகுறு விவசாயிகளுக்கு கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி