சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கள்ள நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனைவாரி அருவியில் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று (நவ.25) தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். பூங்கா மற்றும் படகு சவாரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.