ஆத்தூர்: லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து

தனியார் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் சேலத்தில் இருந்து 55 பயணிகளுடன் கருமந்துறை நோக்கி  சென்று கொண்டிருந்தபோது மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அருகே முத்தம்பட்டி பகுதியில் சென்ற தனியார் பேருந்து முன்னால் சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற ஈச்சர்லாரியின் பின்பக்க டயர் வெடித்து சாலையில் நடுவே விபத்துக்குள்ளானது. 

இதில் பின்னால் வந்த தனியார் பேருந்து ஈச்சர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 55 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் முன்பகுதியில் அமர்ந்திருந்த இரண்டு பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்துப்பினார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி