சேலம்: அத்தூர் கார் பைக் மீது மோதி ஒருவர் பலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாரதியார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் பாலாஜி நண்பர்கள், உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அழகாபுரம் பகுதியில், சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சொகுசு கார் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலாஜி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி