ஆத்தூர்: ஓடிய கார்.. 5 பைக் மீது மோதி விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கருமந்துறை பகுதியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கார், பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்ற அர்ஜுனன் (55) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அர்ஜுனன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கருமந்துறை போலீசார் காரை ஓட்டிய நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி