சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பைத்தூர் சாலையில் வசிக்கும் சின்னராசுவின் மகன் சுரேஷ் (39) என்பவர், குடகு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். விசாரணையில், இரு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.