சேலம்: ஆம்னி பேருந்து லாரி மீது மோதி விபத்து; 3 பேர் படுகாயம் (VIDEO)

சென்னையிலிருந்து சேலம் நோக்கி இரண்டு ஆம்னி பேருந்துகள் சென்றன. இந்த ஆம்னி பேருந்துகள் இரண்டும் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்றபோது இன்று காலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் ஒரு ஆம்னி பேருந்து மற்றொரு ஆம்னி பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனர் பூபதி உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி சுங்கச்சாவடி ஊழியர்கள் மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்னி பேருந்துகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாகச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பேருந்து பயணி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி