ஆத்தூர் நகராட்சியை கண் டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்த கடைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

வணிக வளாகத்தில் 91 கடைகள் உள்ள நிலையில் கடைகளுக்கு வைப்புத் தொகையாக நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 லட்சம் ரூபாய் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே அந்த இடத்தில் பூ மற்றும் பழக்கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக அளவில் டெபாசிட் தொகை கேட்பதால் சாதாரண வியாபாரிகளான பூக்கடை, பழக்கடை, டீக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகம் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அருள்இனியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி