சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அப்பம்மா சமுத்திரத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக் கடை, ராம நாயக்கன் பாளையத்தில் 13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், அரசு உயர்நிலைப் பள்ளியில் 8.5 லட்சம் மதிப்பீட்டில் சமையலறை கூடம் ஆகியவை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. மாநிலங்களவை உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சிவலிங்கம் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.