ஆத்தூர் கொட்டும் மழையில் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ செல்வ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி சுவாமி குடி அழைத்தல், காப்பு கட்டுதல், நிகழ்ச்சியோடு தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

அலங்கரிக்கப்பட்ட தேரில் மகா மாரியம்மன் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் அப்பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது திடீரென மழை பெய்ததால் கொட்டும் மழையிலும் பக்தர்கள் பரவசத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்புடைய செய்தி