சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த புகாரின் பேரில், ஆத்தூர் நகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். லீ பஜார் பகுதியில் அருண்குமார் என்பவர் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்து அவரிடமிருந்து 175 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அருண்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.