ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியின் பேருந்து, தளவாய்பட்டி பிரிவு சாலை வளைவில் திரும்பும்போது, சேலத்திலிருந்து சின்னசேலம் நோக்கிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனடியாக அப்பகுதி மக்கள் குழந்தைகளை பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். விபத்து குறித்து ஆத்தூர் ஊரகப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.