ஆத்தூரில் பள்ளி வாகனங்களில் ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 711 பள்ளி வாகனங்களில் 300 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆர்.டி.ஓ. தமிழ்மணி, டி.எஸ்.பி. சத்யராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் புஷ்பா ஆகியோர் கேமரா சென்சார் மானிட்டர், குழந்தைகள் பாதுகாப்பு உபகரணங்கள், வாகனத்தின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். சென்சார் மானிட்டர் இல்லாத வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மேலும், பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி