ஆத்தூரில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சேலம் மாவட்டம், ஆத்தூர் கிராமம் பஜார் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அதிமுக சார்பில் மத நல்லிணக்க நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசங்கரன், பங்குத்தந்தை அருளாப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொடர்ந்து நோன்பு உணவை அருந்தினர். இதுபோல் தலைவாசல் அருகே உள்ள வீரகனூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி