ஆத்தூர்: மனைவியை கொலை செய்த கணவன் ஆத்தூர் போலீசில் சரண்

ஆத்தூர் அருகே முல்லைவாடி கிராமத்தில் வசிக்கும் சரவணன், தனது மனைவி சித்ராவை சந்தேகத்தின் பேரில் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர், கணவன் சரவணன் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் சரணடைந்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கொலை செய்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி