சேலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 1) நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி