சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று (நவ.13) இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.