ஆத்தூர் பகுதிகளில் சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. வெயில் தாக்கத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள், தற்போது பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழலை அனுபவித்து வருகின்றனர். ஆத்தூர் நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், பைத்தூர், தென்னங்குடி பாளையம், கொத்தாம் பாடி, ராமநாயக்கன்பாளையம், மஞ்சனி, மல்லியகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி