சேலம்: மறைந்த பாட்டிக்கு கேக் வெட்டி இறுதி அஞ்சலி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்த 95 வயதான வெள்ளையம்மாள் உடல் நலக்குறைவால் மறைந்தார். தனது இறப்பிற்குப் பிறகு தன்னை மகிழ்ச்சியுடன் அடக்கம் செய்யுமாறு அவர் குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி, அவரது 24 பேரன்கள், 25 கொள்ளுப்பேத்திகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் 10 கிலோ கேக்கை மேளதாளம், பட்டாசுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று, பாட்டியின் உடல் முன் வைத்து கேக் வெட்டி தங்கள் துக்கத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி