உடனடியாக அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பொதுமக்களே சேர்ந்து அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் கால் சிக்கியதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கெங்கவல்லி போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த டிரைவர் சதீஷ்க்கு ரோஜா என்ற மனைவியும், ஐந்து வயதில் தினேஷ், மூன்று வயதில் திலீபன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.