சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பாப்பநாயக்கன்பட்டி கரிய கோயில் அணையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணையில் உள்ள நீர் நிறம் மாறியதால், மீன் குஞ்சுகள் இறந்து கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.