சேலத்தில் எலக்ட்ரிக்கல் கடையில் நள்ளிரவில் தீ விபத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் பாபு என்பவர் நடத்தி வந்த எலக்ட்ரிக்கல் கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து ஆத்தூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி