சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இந்திராநகர் பகுதியில் உள்ள ஜியோ ரிலையன்ஸ் செல்போன் டவரில் திடீரென புகைமூட்டம் ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.