சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட, நகரப் பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் மற்றும் பல்வேறு இடங்களிலும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் அடிக்கடி நேரப் பிரச்சினையில் தகராறு ஏற்படுவது வழக்கமாக உள்ள நிலையில், கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மற்றும் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் எதிரே தனியார் பேருந்து அரசு பேருந்தை வழிபறித்து சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தி, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை அடுத்து, உடனடியாக அப்பகுதியிலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.