ஆத்தூர்: பேருந்து நிலையம் வந்த முதியவர் உயிரிழப்பு

ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வந்த பரமசிவம் (53) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வலிப்பு பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நகர போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி