சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கடலூர் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள அரசு மதுபான கடை அருகில், கூலி தொழிலாளி முத்து (60) தனியார் கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்னாம்பள்ளி தனியார் கல்லூரி பேருந்தை கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்துள்ளார். கல்லூரி மாணவர்களை இறக்கிவிட்டு திரும்பும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வாழப்பாடி போலீசார் உடலைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.