சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் சிவலிங்கம் தலைமையில், ஆத்தூர் தெற்கு நகர திமுக செயலாளர் ராமச்சந்திரன், தெற்கு நகர பகுதியில் உள்ள வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், BLA2, BDA, BLC, கழக முன்னோடிகள் அனைவருக்கும் திராவிட பொங்கல் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீராம், வடக்கு நகர செயலாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் செழியன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், நகர அவை தலைவர் மாணிக்கம், மாவட்ட கழக பிரதிநிதி சம்பத்குமார், பாலமுரளி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேகர், தலைமைச்செயற்குழு உறுப்பினர் சந்திரமோகன் மற்றும் வார்டு கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.