ஆத்தூர் திமுக மாவட்ட பொருளாளர் சார்பில் திராவிட பொங்கல் விழா

சேலம் மாவட்டம், ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஸ்ரீராம் சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள், திராவிட பொங்கல் விழாவையொட்டி, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 700க்கும் மேற்பட்ட ஒன்றிய, நகர, ஒருங்கிணைப்பாளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி