ஆத்தூர்: கோயில் குடமுழுக்கு; பக்தர்கள் தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் முத்து மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் புதியதாக புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 30 ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் முகூர்த்த காலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீர்த்த குடம், முளைப்பாலிகை ஊர்வலம் நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழாவை ஒட்டி புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மங்கல இசை திருவிளக்கு வழிபாடு கணபதி பூஜை புண்யாகவாசனம் நவக்கிரக ஹோமம் கோபூஜை உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. மேலும் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீர்த்த குடம் மேளதாளம் வானவேடிக்கை முழங்க ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் கொண்டுவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியை காண ராமநாயக்கன்பாளையம், தென்னங்குடி பாளையம் கல்பகனூர் கொத்தாம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவின்போது வானில் கழுகு வட்டமிட்டதால் பக்தர்கள் "கருடா, கருடா" என வணங்கி வாறு பரவசமடைந்தனர். மேலும் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி