சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தப்பூரில் முத்து மலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையும் உள்ளது. மூலவரான முத்துமலை முருகனுக்கு ஆங்கில வருட பிறப்பை ஒட்டி சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் கோயிலில் குவிந்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.