இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தியன் வங்கி முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அர்த்தநாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு